×

ஓட்டல்கள் முன்பு வாகனங்களை நிறுத்துவதால் திருப்புத்தூரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் கவனிப்பார்களா?

திருப்புத்தூர், டிச.19: திருப்புத்தூரில் மதுரை முக்கு அருகே அஞ்சலக வீதி சாலையில் ஓட்டல்கள் மற்றும் கடைகள் முன்பு ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் நகர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். திருப்புத்தூரிலிருந்து எந்நேரத்திலும் எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி உள்ளது. மேலும் அனைத்து ஊர்களுக்கும் செல்லக்கூடிய முக்கிய சாலைகள் திருப்புத்தூர் வந்து செல்லும் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, தேவகோட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கல்லல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்புத்தூர் நகருக்குள் தினந்தோறும் வந்து செல்கின்றது. இதனால் திருப்புத்தூர் நகரில் நாளுக் நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

மேலும் அஞ்சல வீதியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கடைளுக்கு வருபவர்கள் கார்களை ரோட்டில் நிறுத்துவதால், அந்த வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மிகுந்த சிரமத்துகுள்ளாகின்றனர். மேலும் அந்த வழியாக பஸ்கள், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரும் இருப்பதில்லை. எனவே இப்பகுதியில் ரோட்டில் வாகனங்களை நிறுத்த தடை செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்
வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Traffic Police ,hotels ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...